ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் குழப்பம் நீடிப்பு: நீதிபதி நியமனம் பற்றி அரசாணை வெளியிடப்படவில்லை
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, அரசாணை வெளியிட்ட பிறகு விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளார். விசாரணையின்போது ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வராக இருந்த ஓபிஎஸ் முதல் தற்போது சீனியர் அமைச்சராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் வரை அனைவரும் வேறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். அந்த வரிசையில் புதிதாக செல்லூர் ராஜூ, தீபக் உள்பட பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக அரசு ஒரு உத்தரவு வெளியிட்டது. அந்த உத்தரவில், “ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது” என்று கூறப்பட்டது. இதற்கான அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனால் குழப்பம் நீடிக்கிறது.
அரசாணை வெளியிட்டதும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் விசாரணை தொடங்க வாய்ப்புள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிபதி விசாரணையின்போது என்னென்ன விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75 நாள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதனால், விசாரணை கமிஷனுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி, முதல் கட்டமாக அப்போலோ மருத்துவமனையில் தான் தனது விசாரணையை தொடங்குவார். அப்போது, செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டபோது எந்த நிலையில் இருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் கேட்பார். அடுத்து, ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் அவர் நேரடியாக விசாரணை நடத்துவார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து வந்த பிசியோதெரபிஸ்ட்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படும்.
அதேபோன்று, அதிமுக வேட்பாளர் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் தாக்கல் செய்தபோது ஜெயலலிதாவிடம் கைவிரல் ரேகை பெற்ற சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பாலாஜியிடமும் விசாரணை நடைபெறும். மேலும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது உடன் இருந்து கவனித்துக் கொண்ட சசிகலா மற்றும் அவரது உறவினர்களிடமும் விசாரணை நடைபெறும். ஜெயலலிதா உடல்நிலை குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் வெளியில் பேட்டி அளித்தனர். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேட்டி அளித்தீர்கள் என்பது குறித்து நீதிபதி விளக்கம் கேட்பார்.
முன்னதாக, செப்டம்பர் 22ம் தேதிக்கு முன் போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்துவார். முக்கியமாக, அப்போலோ மருத்துவமனையில், அவர் தங்கி சிகிச்சை பெற்று வந்த வார்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் ஏன் அகற்றப்பட்டது? என்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது. இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும். முக்கியமாக, ஒரு மாநிலத்தின் முதல்வர் உடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெறும்போது, முக்கிய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் மூலம்தான் நடைபெறும்.
அதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த விசாரணையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். அதேபோன்று அப்போது முதல்வர் பொறுப்புகள் அனைத்தையும் கவனித்த ஓ.பன்னீர்செல்வத்திடமும் நீதிபதி ஆறுமுகசாமி நேரடி