ப்ளூவேல் விளையாட்டுக்கு மேலும் ஒருவர் பலி: புதுச்சேரி மாணவரின் உயிரை பறித்தது விபரீத விளையாட்டு








புதுச்சேரி: ப்ளூவேல் விளையாட்டுக்கு புதுச்சேரியில் படித்த வந்த மாணவர் பலியாகியுள்ளார். மதுரை மாணவர் தற்கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சியாளைகள் அடங்கும் முன்பே புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து வந்த மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். அசாமை சேர்ந்த சசிகுமார் கோரி என்ற மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். அவரது லேப்டாப் மற்றும் மொபைல் போனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ப்ளூவேல் என்ற ஆன்லைன் விளையாட்டு பெற்றோர் மற்றும் பொதுமக்க்ள மத்தியிலும் பீதியை உருவாக்கியிருக்கிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கும் அசாம் மாணவர் சசிகுமார் தூக்குப்போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ப்ளூவேல் என்ற ஆன்லைன் விளையாட்டு மூலம் ஏற்பட்ட மோகத்தின் காரணமாக சசிகுமார் இன்று அதிகாலை தூக்கிட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மாணவரின் செல்போனை போலீசார் கைப்பற்றினார். இந்த செல்போனில் அசாமில் இருக்கும் தன்னுடைய நண்பர்கள் 4 பேருக்கு ப்ளூவேல் விளையாட்டு விளையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவருடைய லேப்டாப்பை போலீசார் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இந்த மாணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். புதுச்சேரி காலாப்பட்டில் பின்புறம் இருக்கும் கண்ணதாசன் விடுதியில் தங்கி எம்.பி.ஏ. படித்து வந்தார். இந்த விடுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள். இவர் இந்த விடுதியின் பின்புறத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த சகமாணவர்கள் காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி காலாப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url