50 லட்சத்திற்கும் அதிகமானோர் ரசித்துள்ள லட்சுமிராய் வீடியோ
லட்சுமிராய் நடித்து ஜுலி 2 படத்தின் ட்ரெய்லரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமிராய். இதை தொடர்ந்து வாமணன், முத்திரை, மங்காத்தா, காஞ்சனா என பல படங்களில் நடித்தார். இந்நிலையில் பாலிவுட்டில் முதன் முறையாக தீபக் ஷிவ்தாசனி தயாரித்து, இயக்கியுள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2 நடித்துள்ளார்.
ஹீரோ இல்லாத இந்தப் படத்தில், லட்சுமிராய் நடிகையாக அவர் நடித்திருக்கிறார். ஒரு பெண் நடிகையாக ஆவதற்கு என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறாள் என்பதுதான் கதை. படு கவர்ச்சியாக நடித்துள்ளார் லட்சுமிராய். இதன் ட்ரெய்லர் வெளியான 15 நாட்களில், 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.