அதிமுக பொதுக்குழு முதல்வர்-துணை முதல்வர் வருகை 14 தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு



சென்னை

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியிலிருந்து முழுவதும் நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் சுமார் 2,500 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2,140 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்துக்கு வந்தனர். செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள் வர தொடங்கினர்கள். பொதுக்கூழுவிற்கு 95 சதவீதம் உறுப்பினர்கள் வருகை தந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை  வானகரத்தில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்து உள்ளனர்.

டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பொதுக்குழுவிற்கு வருகை தந்து உள்ளார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தால் வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.  அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url