வலைதளத்தில் சிறுவனின் நிர்வாண படம் நடிகர் ரிஷி கபூர் மீது போலீசில் புகார்
மும்பை,
பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர். இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் தகவல்கள் சிலநேரங்களில் சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. இந்தநிலையில் இவர் சமீபத்தில் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் சிறுவன் ஒருவனின் நிர்வாண படத்தை வெளியிட்டு இருந்தார்.
இதுகுறித்து அவர் மீது மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரை மும்பையை சேர்ந்த வக்கீல் ஒருவர் அளித்து உள்ளார்.
அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுமார் 25 லட்சம் மக்கள் ரிஷி கபூரை டுவிட்டரில் பின் தொடருகின்றனர். அதில் அவர் சிறுவனின் படத்தை ஆபாசமாக வெளியிட்டுள்ளார். சிறுவனின் படத்தை ஆபாசமாக வெளியிட்டதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் மாநில குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை செயலாளரிடமும் அளிக்கப்பட்டுள்ளது.