கவர்ச்சி சண்டை









“என்னுடைய கவர்ச்சி புகைப்படங் களால் இவர்களுக்கு என்ன பிரச்சினை?” என பாலிவுட் நடிகை ஈஷா குப்தா தைரியமாக குரல் கொடுத்திருக்கிறார். அண்மையில் ஈஷா குப்தா தனது கவர்ச்சி புகைப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்தனர். இதையடுத்து அந்த புகைப்படத்தை நீக்கியவர் மீண்டும் வேறொரு கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டார். மீண்டும் நெட்டிசன்கள் அவரை வசைபாட, அதற்கு பதிலடியாக அரை நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டார்.

இதனால் சமூக வலைத்தளத்திலும், பாலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பு பற்றிக்கொண்டது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “நான் மாடலாக இருந்தபோது நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன். அப்பொழுது யாரும் என்னை எதுவும் கேட்டதில்லை. என் புகைப்படங்களால் இவர்களுக்கு என்ன பிரச்சினை. நம் நாட்டில் எப்பொழுதும் பெண்களைத் தான் குறை கூறுகிறார்கள். கவர்ச்சியை விரும்புபவர்கள் இருக்கும் வரை, கவர்ச்சி புகைப்படங்களும் வெளியாகிக்கொண்டே இருக்கும்” என்றார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url