மீண்டும் டைட்டானிக் காதல்







உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன, காலத்தால் அழியாத காதல் காவியம் ‘டைட்டானிக்’. ஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்களை, இத்தனை வருடம் கழித்தும் இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு கவலைப்பட்டவர்களை விட, இந்த ஜோடி பிரிந்ததற்கு கவலைப்பட்டவர்கள் தான் அதிகம். இந்த நிலையில் இந்த கதாபாத்திரங்களில் நடித்த கேட் வின்ஸ்லெட் மற்றும் டி கேப்ரியோ ஆகியோர்களை காலம் வெவ்வேறு பாதையில் பயணிக்க வைத்தாலும், இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தெற்கு ஸ்பெயினில் நடந்த சுற்றுப்புற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மாநாட்டில், கேட் வின்ஸ்லெட் மற்றும் டி கேப்ரியோ கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கேட் வின்ஸ்லெட்டை, டி கேப்ரியோ தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் நீச்சலுடையில் தங்களது 20 ஆண்டு கால மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url