உலக அளவில் 3500 திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் விவேகம்




சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாக உள்ளது. அஜித்துடன் காஜல் அகர்வால், அக்‌ஷாராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விவேகம்’ படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ரஜினி நடித்த கபாலி படம் தான் 700 திரையரங்குகளில் வெளியானது. ஆனால் விவேகம் 850 திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.



கேரளா 300, தெலுங்கானாவில் 450, இந்தியாவின் மற்ற பகுதிகளில் 300 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் மலேசியாவில் 112 இடங்களில் 700க்கும் அதிகமான ஸ்கிரீன்களில் விவேகம் படம் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே 1500க்கும் அதிகமான தியேட்டர்களில் ‘விவேகம்’ திரைப்படம் வெளியாகிறதாம். ஒட்டுமொத்தமாக உலகளவில் ‘விவேகம்’ திரைப்படம் 3500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாகத் தெரிகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url