பாக்க வேண்டியத மட்டும் பார், காட்றதெல்லாம் பாக்காதே.. அனுசுயா விளாசல்





டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அனுசுயா பரத்வாஜ். தற்போது ராம் சரணுடன் ஜோடியாக ‘ரங்கஸ்தலம் 1985’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கிளாமரான உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் தோன்றினார். அதற்கு கமென்ட் வெளியிட்டிருந்த ஒருவர், ‘உனக்கு மண்டைல கொஞ்சமாவது ஏதாவது இருக்கா. எதற்காக இப்படி ஆபாசமாக உடை அணிந்து வர்றீங்க குடும்பத்தோட பாக்க முடியல’ என்றார். இதைப் படித்து உர்ரான அனுசுயா கமென்ட் வெளியிட்ட நபரை லெப் ரைட் வாங்கினார்.




அவர் கூறும்போது, ‘பார்க்க பிடிக்கவில்லையென்றால் பார்க்காதீங்க. உங்க குடும்பம் ரொம்பவே உசந்ததுன்னு நினைத்தீர்கள் என்றால் மற்றவர்கள் வேலையில்  மூக்கு நுழைக்கக்கூடாது. இந்த உடைதான் அணிய வேண்டும் என்று யாருக்கும் நீங்கள் ஆர்டர் போட முடியாது. பொதுவானவர்களையோ, பெண், அம்மா, மனைவி என யாரைப்பற்றியும் விமர்ச்சிக்கும் உரிமையை நீங்களே எடுத்துக்கொள்ளக்கூடாது. என்னுடைய வேலையை நான் பார்க்கிறேன்.

என்ன உடை அணிய வேண்டும் என்பது என் விருப்பம். உங்களுக்கு என்ன தேவையோ அதைமட்டும் பாருங்கள். காட்டுவதையெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. ரொம்பவும் கண்ணியமானவர்கள் என்றால் எதற்காக குழந்தை பலாத்காரம் நடக்கிறது. 65 வயது பெண்ணைகூட பலாத்காரம் செய்வது ஏன்? அவர்களிடம் நீங்கள் எதைப்பார்த்தீர்கள். நாங்கள் பொழுதுபோக்கு துறையில் இருக்கிறோம். ஜாலியாக இருந்தாலும் எங்கள் எல்லையை நாங்கள் மீற மாட்டோம். இவ்வாறு அனுசுயா கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url