சன்னி லியோனை கண்டு டாப் ஹீரோக்கள் கதறல் : இயக்குனர் விளாசல்
ஆபாச நடிகை சன்னி லியோன் இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் வடகறி படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். வேறு சில படங்களில் அவரை நடிக்க அணுகியபோது கோடிகளில் அவர் சம்பளம் கேட்டதும், கால்ஷீட் கேட்டு சென்றவர்கள் ஜூட் விட்டனர். சமீபத்தில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சன்னி லியோன் வந்தார்.
அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியது. விசில் அடித்தும், டாட்டா காட்டியும் அவரை ரசிகர்கள் வரவேற்றனர். அதைக்கண்டு பரவசம் ஆன சன்னி லியோன் அவர்களுக்கு கும்பிடுபோட்டதுடன் தனது ஸ்டைலில் பிளையிங் கிஸ் தந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
சன்னி லியோன் வருகை குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா கமென்ட் வெளியிட்டிருக்கிறார். அவர் கூறும்போது,’சன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தை பார்த்து மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் பொறாமையில் அழுது புலம்புவார்கள். கேரள ரசிகர்களின் உயர்ந்த எண்ணத்துக்கு எனது வணக்கம்’ என விளாசியிருக்கிறார்.
