ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் உயிரோடு உள்ளார் : குர்து இன மக்களின் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரி உறுதி
பாக்தாத் :
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாக ஈராக்கில் இயங்கிவரும் குர்து இன மக்களின் தீவிரவாத தடுப்புப் பிரிவு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐஸ் தீவிரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.ஈராக்கில் ஐஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த படைகளை ஈராக் ராணுவமும் குர்து இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன.ஈராக்கின் முக்கிய பகுதியான மொசூல் நகரம் சமீபத்தில் மீட்கப்பட்டது.
அப்போது நடந்த சண்டையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி படுகாயமடைந்து உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.ஆனால் இதனை குர்து இன மக்களின் தீவிரவாத தடுப்புப் பிரிவு படையின் மூத்த அதிகாரி லஹுர் தலாபனி மறுத்துள்ளார். மொசூல் நகரில் நடந்த சண்டையில் அல் பக்தாதி கொள்ளப்படவில்லை என்ற அவர்,சிரியாவின் ரக்கா நகரத்தில் பாக்தாதி பதுங்கியிருப்பதாக கூறியுள்ளார்.சிரியாவில் அபுபக்கர் அல் பக்தாதி உயிரோடு இருப்பதை 99% உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.