நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சிகரெட் விலை உயர்வு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு
டெல்லி:
சிகரெட் மீதான வரியை உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிகரெட் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட் மூலம் 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. இதில் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஜெட்லி கூறியது, சிகரெட்மீதான வரி 28 சதவீதம் உயர்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகரெட் விலை நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்படுகிறது. இந்த வரி உயர்வால் அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் ஜி.எஸ்.டி.ஆய்வு கூட்டம் வரும் ஆகஸ்ட் முதல் வராத்தில் கூடும் என்றார்.