சினிமாவில் நிச்சயம் நடிப்பேன் : சவுந்தர்யா ரஜினிகாந்த்



ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தற்போது தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸ் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஐபி படத்தின் இரண்டாம் பாகம் அதிரடி கலந்த குடும்ப பாங்கான படமாக தயாராகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் உருவாகி உள்ளது. எனக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை. நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் சினிமாவில் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url