கேரவேன் இல்லாததால் பொது இடத்தில் சிறுநீர் கழித்த இளம் நடிகை




இன்டோர், அவுட்டோர் என எந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தினாலும் ஏசி, கழிப்பறை வசதியுடன் கூடிய கேரவேன் இருந்தால்தான் ஷூட்டிங் வருவேன் என்று பல நடிகர், நடிகைகள் கண்டிஷன் போடுவதுண்டு. அவர்களில் ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கின்றனர். இந்தி நடிகை அலியாபட் அவுட்டோர் படப்பிடிப்பில் கேரவேன் இல்லாததால் பொது இடத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்பற்றி பகிரங்கமாக கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’ஹைவே என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது. 

அங்கு கழிப்பறை வசதியோ, கேரவேன் வசதியோ கிடையாது. ஒரு டிரக்கில் ஏறி படக்குழுவினர் அனைவரும் செல்வோம். எங்கு லொகேஷன் நன்றாக இருக்கிறதோ அங்கு டிரக்கை நிறுத்தி படப்பிடிப்பு நடத்தினோம். இது கொரில்லா பாணியிலான படப்பிடிப்பு. சிறுநீர் கழிக்க வேண்டுமென்றாலும் பொது இடத்தில்தான் நான் செய்ய வேண்டியிருந்தது’ என்றார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url