ஜுலிக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் : ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜுலி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஜுலிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அந்த வரவேற்பு தற்போது குறைந்துள்ளது. நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு புரோ கபடி போட்டியில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியினர் விருந்தினர்களாக வந்திருந்தனர். அப்போது அவர்களை பார்க்க ஜூலி அவசரமாக ஓட முயன்றபோது கீழே விழுந்தார். இதில் அவரது வயிற்றில் கடுமையாக அடிபட்டது. இதன் காரணமாக ஜுலி கதறி அழுதார். அதை நடிப்பு என்று காயத்ரி, மற்றும் நமீதா கூறினர்.
அப்போது ஓவியா ஜூலிக்கு ஆறுதல் சொல்லி அவரை சமாதானபடுத்தினார். ஆனால் ஓவிய சென்ற பின்னர் கயாத்ரி வந்து ஜூலியிடம் சண்டை போட்ட போது ஓவியா தான் என்னை குழப்பி விட்டுட்டா என ஓவியாவுக்கு எதிராக பேசினார் ஜூலி. இதனையடுத்து ஜுலிக்கு எதிராக மீம்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜுலி மிக மோசமாக நடந்து கொள்வதாகவும், அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம் என்று என்று குறிப்பிட்டுள்ளார்.