உலக ஹாக்கி லீக் கால் இறுதியில் இந்தியா
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கி உலக லீக் அரை இறுதி தொடரின் கால் இறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. ஜோகன்னஸ்பர்கில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை போராடி வென்றது. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி துபே அபாரமாக கோல் போட்டார். 3 லீக் ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பி பிரிவில் 2வது இடத்தில் உள்ள இந்தியா கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்தது.