சென்னைக்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது: ஆந்திர அரசு திட்டவட்டம்
திருப்பதி: தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு தற்போது தண்ணீர் தரமுடியாது என ஆந்திர அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. திருப்பதியில் தெலுங்கு கங்கா திட்டத்தின் செயல் பொறியலாளர் சுதாகர் பாபு இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழக அரசு ஆந்திராவுக்கு நதிநீர் பங்கிட்டு கால்வாய் பராமரிப்புக்காக வழங்க வேண்டியது ரூ. 600 கோடி வழங்க வேண்டும்.
தமிழக அரசு நிலுவைத் தொகை வந்தால் மட்டுமே உரிய நேரத்தில் தண்ணீர் வழங்க முடியும் என்றார். மேலும் போதிய மழை பெய்து அணைகளில் தண்ணீர் வந்தால் அதன் பிறகு அரசின் உத்தரவு படி சென்னைக்கு தண்ணீர் விடுவிக்கப்படும் என்று சுதாகர் பாபு திட்டவட்டமாக கூறியுள்ளார்.