போதுமான இருப்பு உள்ளபோதும் மதிய உணவில் துவரம் பருப்பு சேர்க்க மனிதவள துறை மறுப்பு



புதுடெல்லி,: அரசு விடுதிகள், கல்லூரிகளில் மதிய உணவு பட்டியலில் துவரம் பருப்பை சேர்ப்பதற்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறை அனுமதி மறுத்துள்ளது. அதிக அளவு துவரம் பருப்பு கையிருப்பு உள்ளதால், அரசு விடுதிகள் மற்றும் கல்லூரிகளில் மதிய உணவில் துவரம் பருப்பை சேர்க்க வேண்டும் என உணவுத் துறை அமைச்சகம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இந்த பரிந்துரையை ஏற்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மறுத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதை சாப்பிட வேண்டும் என்பதை அரசு  திணிக்க முடியாது என்றும், மதிய உணவில் துவரம் பருப்பை சேர்ப்பதால் செலவு அதிகரிக்கும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு, மதிய உணவிற்காக தொடக்க பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.4.13 மற்றும்  உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.6.18 ஒதுக்கீடு செய்கிறது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url