சனாகானை மர்ம பெண் பின்தொடர்ந்ததால் பரபரப்பு
சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனாகான். ஈராக்கில் அமைந்துள்ள புனித தளம் மதினாவுக்கு ஆண்டுக்கொரு சனாகான் செல்வது வழக்கம். சமீபத்தில் அவர் அங்கு சென்றார். இந்த பயணம் அவரை பயத்தில் ஆழ்த்தி விட்டது. மர்ம பெண் ஒருவர் சனாவை பின்தொடர்ந்ததே இதற்கு காரணம். இதுபற்றி சனாவுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது,’அடையாளம் தெரியாத ஒரு பெண், சனா செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும் அவரை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். இதனால் சனாவுக்கு தேவையில்லாத டென்ஷன் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து தனக்கு பாதுகாப்புக்காக பவுன்சர்களை (பாதுகாவலர்கள்) ஏற்பாடு செய்தார். அவர்கள் அந்த மர்ம பெண்ணை சனாவிடம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டனர். அப்பெண் தன்னை தாக்குவாரோ என்ற பயத்தில் ஒவ்வொரு நிமிடமும் நடுங்கியபடியே இருந்தார் சனா’ என்றனர்.
‘ஓட்டலில் அறை எடுத்து தங்கும்போதெல்லாம் ரசிகர்கள் திரண்டு நின்று என்னை சந்திக்க வற்புறுத்துவார்கள். ஆனால் 14 வயது பெண் என்னை பின்தொடர்ந்தது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எந்த இடத்துக்கு சென்றாலும் பாதுகாப்புக்கு பவுன்சர்களை என்னுடன் அழைத்து செல்ல வேண்டி இருந்தது. இதுமிகவும் டென்ஷனான தருணமாக இருந்தது’ என்றார் சனாகான்.