அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள்........




பழங்களின் அண்ணன் அன்னாசிப்பழம்.சிறுநீரகங்களின் சிறந்த நண்பன்.இது முரட்டு தோல் உள்ள மஞ்சள் நிறப்பழம்.சாறு மிகுந்து இனிப்புடன் காணப்படும்.சர்க்கரைச் சத்து மிகுந்தது.



அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள்:

நீர்=86%
மாவுப்பொருள்=12%
புரதம்=0.6%
கொழுப்பு=0.1%
கால்சியம்=0.12%
பாஸ்பரஸ்=0.01%
இரும்புத்தாது=0.9 யூனிட்
வைட்டமின் C=60 யூனிட்
வைட்டமின் A=60 யூனிட்
வைட்டமின் B2=120 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் அன்னாசி பழச்சாறில் உள்ள சத்துக்கள்.

மருத்துவக் குணங்கள்:

உடனடி சக்தி,தெம்பு,புத்துணர்ச்சி தருவது அன்னாசிப் பழச்சாறு.குரல் வளத்தை மேம்படுத்தும்.தொண்டை வலி நீக்கும்.சளி,இருமல்,மூச்சுப் பிணிகள் விலகும்.

ஜீரணம் மேம்படும்.மலச்சிக்கல் விலகும்.இதில் மிகுந்துள்ள குளோரினால் நச்சுப்பொருட்கள் விரைவில் வெளியேறி சிறுநீரகம் பாதுகாப்பும்,ஓய்வும் பெறுகின்றது.

காய்ச்சல்,மஞ்சள்காமாலை போன்றவற்றை குறைக்கும் உன்னதமான பழச்சாறு மிக்கது அன்னாசி.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url