Type Here to Get Search Results !

உணவு வகைகள் .....






காலை உணவுகள்:

காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு சக்தி தேவை. எனவே காலை உணவு மிகவும் அவசியம் என்பதை மனதில் கொண்டு காலை உணவு உண்ணும் போது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உண்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடல் எடையும் கூடாமல் இருக்கும்.

செய்யும் முறை:

அருகம்புல் சாறு, எலுமிச்சை, பூசணி, மணத்தக்காளி, வாழைத்தண்டு, வல்லாரை ஆகியவற்றில் சாறு எடுத்து காலையில் பருக வேண்டும்.

பின் அவலை ஊற வைத்து அதில் தேங்காயை துருவிபோட்டு அதனுடன் கடலை சேர்த்து சாப்பிட வேண்டும்.

மேலும் கொண்டைகடலை,  பயறு, உளுந்து, கோதுமை ஆகியவற்றை ஊற வைத்து வடிகட்ட வேண்டும்.

பின் அதனை பருத்தி துணியால் மூடி வைக்க வேண்டும். அவ்வாறு மூடி வைத்தால் பயறு வகைகள் முளைத்து விடும்.

அவ்வாறு முளைத்த பயறு வகைகளுடன் தேங்காயை துருவிப்போட்டு சாப்பிட வேண்டும்.

கேழ்வரகு கூழ், கோதுமை கஞ்சி, அரிசி கஞ்சி, மற்றும் இட்லி ஆகியவற்றை காலை உணவாக சாப்பிடலாம்.

மதிய உணவுகள்:

நாம் அனைவரும் காலை உணவை உண்பதே இல்லை.‌ ஏனெனில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் அதை கவனிப்பதும் இல்லை. எனவே மதியம் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டால்தான் உடல் புத்துணர்ச்சி பெறும்.‌ எனவே நாம் அனைவரும் அடிப்படை உணவாக உண்பது மதிய உணவுதான். மதிய உணவு மிகவும் முக்கியமானது.

செய்யும் முறை:

காலிஃப்ளவர், வெள்ளரிக்காய், புடலங்காய்,  பறங்கி, பூசணி, சுரக்காய், முட்டைகோஸ், சௌசௌ மற்றும் கேரட் ஆகியவற்றின் மேல்தோல்களை சீவி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

பின் தக்காளி, புதினா, தேங்காய் ஆகியவற்றை துருவிப்போட்டு தயிரில் கலந்து சாப்பிட வேண்டும்.

இரவு உணவுகள்:

பழவகைகள் மற்றும் முளைத்த பயறு வகைகள் சாப்பிடுவது நல்லது.

இயற்கை பால்:

ஐந்து முந்தரி பருப்பை அல்லது பாதாம் பருப்பை ஊறவைத்து அதனுடன் அரை கப் தேங்காய் துருவிப்போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்தால் இயற்கை பால் தயாராகி விடும்.

பின் அதனை பால் அருந்துவதற்கு பதில் இயற்கை பாலை பயன்படுத்தலாம்.

சுக்கு காபி:

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது  நீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு பங்கு சுக்கு, இரண்டு  பங்கு கொத்தமல்லி மற்றும் நன்னாரி வேர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின் இறுதியாக நாட்டு சர்க்கரை சேர்த்தால் சுக்கு காபி தயாராகி விடும்.

இயற்கை காபி:

துளசி, சுக்கு, மல்லி, காயவைத்த வெந்தயம், நன்னாரி வேர், கருங்காலி, வெட்டி வேர், நெல்லிக்கனி, ஆரஞ்சு பழத்தோல்கள், சந்தனக்கட்டை முதலியவற்றை
காயவைத்து இடித்துத் தூளாக்கி காப்பித்தூளாக பயன்படுத்தவும்.

பின்பு வெல்லத்தை தண்ணீர் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு அதனுடன் பொடி மற்றும் இயற்கை பால் சேர்த்து  சாப்பிடவும்.

இயற்கை டீ:

ஆவாரம் பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, புதினா, துளசி, நன்னாரி வேர் ஆகியவற்றைக் காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு இப்பொடியுடன் இயற்கை பால், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து டீ தயாரித்துக்கொள்ள வேண்டும்.

”உணவே மருந்து; மருந்தே உணவு” என்ற பழமொழியை உணர்ந்து மூன்று வேளையும் வயிறார உண்போம்; நோயிலிருந்து நம்மை நாமே காத்துக்கொள்வோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad