நடிகருடன் காதல் திருமணமா? ராஷ்மி பதில்
கண்டேன், மாப்பிள்ளை விநாயகர் போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது பிரியமுடன் பிரியா படத்தில் நடித்து வருபவர் ராஷ்மி. இவர் தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்த வண்ணமிருந்தது. இதுகுறித்து ராஷ்மி கூறியது: நான் யாரையும் காதலிக்கவில்லை. எனது வேலையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். சினிமாவில் நடிக்கும்போது டெலிவிஷனில் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். அதில் தவறு இல்லை.
இன்றைக்கு நான் இந்தநிலைக்கு உயரக் காரணம் டெலிவிஷன்தான். பெரிய படங்கள் ரிலீஸ் செய்யும்போது அதை புரமோட் செய்வதற்காக டெலிவிஷனைத்தான் நாடுகிறார்கள். ஹாலிவுட்டில் பிரபல நடிகர்கள்கூட வெப் சீரியல்களில் நடிக்கிறார்கள். 14 வருட போராட்டத்துக்கு பிறகு டெலிவிஷன்தான் என்னை அடையாளம் காட்டியது. அடுத்து பிரபாகர் இயக்கும் படத்தில் ஆதி ஜோடியாக நடிக்க உள்ளேன்’ என்றார்.