Type Here to Get Search Results !



டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் ஆகிய XL சைஸ் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, 23.99 - 25.99 லட்சத்துக்கு (டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை) தனது புதிய MU-X எஸ்யூவியை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது இசுஸூ. இது பிக்-அப்பான D-Max V-Cross வாகனத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், MU-X எஸ்யூவியின் அதன் பாதிப்பு தூக்கலாக இருக்கிறது.


இந்த எஸ்யூவியின் முன்பக்கமே, அதற்கான சிறந்த உதாரணம்! இதுவே பக்கவாட்டுப் பகுதியைப் பார்த்தால், சொகுசான 3 வரிசை இருக்கைகள் மற்றும் கூடுதல் வசதிகளுக்கு ஏற்றபடி மாற்றப்பட்டுள்ளது. புதிய பம்பர் மற்றும் படுக்கைவசத்தில் இருக்கும் டெயில் லைட்களுடன், MU-X எஸ்யூவியின் பின்பக்கமும், பிக்-அப்பைவிட வித்தியாசமாகவே இருக்கிறது.

காருக்குள்ளே பார்த்தால், கேபின் அப்படியே செவர்லே ட்ரெய்ல்பிளேசர் மற்றும் இசுஸூ D-Max V-Cross ஆகியவற்றின் ஜெராக்ஸ்தான்! ஆனால் D-Max V-Cross உடன் ஒப்பிடும்போது LED DRL, 3 வரிசை லெதர் இருக்கைகள், பவர்ஃபுல் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய புதிய ஸ்டீயரிங் வீல், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பெரிய 255/65 R17 Diamond Cut அலாய் வீல்,

10-inch DVD சிஸ்டம். 6-way Power Adjustable முன்பக்க இருக்கை ஆகியவை கூடுதலாக இடம்பெற்றுள்ளன. முன்னே சொன்ன செவர்லே மற்றும் இசுஸூ மாடல்கள் அனைத்தும், 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இசுஸூவின் I-GRIP லேடர் ஃப்ரேம் ப்ளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்படுகின்றன!





4x2 AT / 4x4 AT எனும் இரு வேரியன்ட்களில் வெளியாகியுள்ள MU-X எஸ்யூவியில், 177bhp பவர் - 38kgm டார்க் - 13.8kmpl மைலேஜை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் Ddi VGS Turbo Hi-Power டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு Sequential Shift ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது; CBU முறையில் இறக்குமதி செய்து, இந்தியாவில் ட்ரெய்ல்பிளேசர் எஸ்யூவியை விற்பனை செய்கிறது செவர்லே. இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையே (23.95 லட்சம்), MU-X எஸ்யூவியை விடக் குறைவாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

ஆனால் இசுஸூ நிறுவனமோ, ஆந்திர பிரதேசம் ஶ்ரீசிட்டியில் இருக்கும் தனது தொழிற்சாலையில்தான் MU-X எஸ்யூவியை அசெம்பிள் செய்ய உள்ளது; ஃபார்ச்சூனர் - எண்டேவர் - பஜேரோ ஸ்போர்ட் ஆகிய XL சைஸ் எஸ்யூவிகளை விடக் குறைவான விலையில், MU-X எஸ்யூவி அறிமுகமாகி இருப்பது பெரிய ப்ளஸ்!





சர்வதேச சந்தைகளில் MU-X எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இசுஸூ அறிமுகப்படுத்திவிட்டது என்றாலும், இந்தியாவுக்கு வருவது என்னவோ, அதற்கு முந்தைய மாடல்தான் என்பது மைனஸ்தான்; 23.99 - 25.99 லட்சத்தில் (டெல்லி எக்ஸ் ஷோரும் விலை), MU-7 எஸ்யூவிக்கு மாற்றாகக் களமிறங்கி இருக்கும் MU-X எஸ்யூவியின் புக்கிங் (25 - 50 ஆயிரம் ரூபாய்), இசுஸூவின் டீலர்களில் கடந்த வாரம் துவங்கிவிட்டது!

பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தமட்டில், High Tensile ஸ்டீல்லால் ஆன பாடி - crumple zones - Anti Intrusion பார் ஆகியவற்றுடன், ESC, TCS, ABS, EBA, EBD, 3 ISOFIX பாயின்ட், முன்பக்கத்தில் 2 காற்றுப்பை & 2 சீட் பெல்ட் Pre Tensioners போன்ற பல அம்சங்கள் உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad