விஜய்யிடம் பிடித்தது அவரது அமைதி தான் : நித்யாமேனன்




தெறி படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இது விஜயின் 61-வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வந்தது. இது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படமாகும்.

இந்த படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ளார். விஜய்யிடம் பிடித்தது அவரது அமைதி தான் என்று நித்யாமேனன் தெரிவித்துள்ளார். அதே போல் ஷுட்டிங் ஸ்பாட்டில் கதாபாத்திரத்தை மட்டுமே பேசுவார் என்றும், அவருடன் நடித்தது புது அனுபவமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url