40 நாட்கள் மும்பையில் ரஜினி படப்பிடிப்பு : அஞ்சலி பட்டில் அனுபவம்
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. கடந்த 28ம் தேதி அங்கு படப்பிடிப்பு தொடங்கியது. அதில் ரஜினி பங்கேற்று நடித்து வருகிறார். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. முதல்நாள் படப்பிடிப்பில் ரஜினியுடன் ஷுமா குரோஷி, அஞ்சலி பட்டில் உள்ளிட்ட 20 நடிகர்கள் நடித்தனர். தொடர்ந்து தாராவி, கிராண்ட் சாலை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது.
படப்பிடிப்பில் பங்கேற்றது குறித்து அஞ்சலி பட்டில் கூறும்போது,’இப்படத்தின் தேர்விற்காக இயக்குனர் ரஞ்சித்தை சென்னையில் சில முறை நேரில் சந்தித்தேன். படம்பற்றி நிறைய எடுத்துச் சொன்னார். அத்துடன் ரஜினிகாந்த் படம். எப்படி வேண்டாம் என்று சொல்வேன். உடனே ஒப்புக்கொண்டேன்.
இதில் எனக்கு மிகப் பெரிய வேடமா என்கிறார்கள். ரஞ்சித் இயக்கிய முந்தைய படங்களை பார்த்தாலே அதுபற்றி தெரியும். சமவாய்ப்புள்ள கேரக்டர் ஏற்றிருக்கிறேன். ரஜினிதான் பிரதானம். அதேசமயம் மற்ற நடிகர்களுக்கும் போதிய வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது’ என்றார்.