ஜூன் 9-ம் தேதி வெளியாகிறது விக்ரம் பிரபுவின் சத்ரியன்
சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை அடுத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள படம் ‘சத்ரியன்’. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாகவும், மஞ்சிமா மோகன் ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்காக காத்து கொண்டிருக்கிறது.
முதலில் மே 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென தமிழ் திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக வெளியீட்டில் பின்வாங்கியது. இந்நிலையில், வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றுள்ளதை அடுத்து வரும் ஜூன் 9-ம் தேதி ‘சத்ரியன்’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘சத்ரியன்’ பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ‘நெருப்புடா’ மற்றும் ‘பக்கா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம் பிரபு.