எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த ஆளுடன் நடிக்க மாட்டேன்: நயன்தாரா தரப்பு ஆவேசம்

நாயகிக்கு முக்கியத்துவமான வேடங்களை மட்டுமே தேர்வு செய்து அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களை கூட தவிர்த்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் அவர் நடிக்கவுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.






இந்த நிலையில் நயன்தாராவுக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது 'நயன்தாராவுக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே, அவருக்கு கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வார். கதை சரியில்லை என்றால் யார் ஹீரோவாக இருந்தாலும், எத்தனை கோடி கொடுத்தாலும் அவர் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்' என்று ஆவேசமாக பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த தொழிலதிபர் தரப்பும் தற்போது நயன்தாராவுடன் நடிக்கும் எண்ணமும், சினிமாவில் நடிக்கும் எண்ணமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது. ஒருவேளை நயனுடன் நடிக்க விருப்பப்பட்டால் நல்ல கதையோடு வந்தால் அவருடைய எண்ணம் ஈடேறும் என தெரிகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url