இன்று நள்ளிரவில் வெளியாகும் விவேகம் டீசர்
அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் டீசர் இன்று நள்ளிரவு வெளியாக உள்ளழது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அஜீத்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
அஜீத் பிறந்த நாளில் டீசர் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் முதலில் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அப்போது எதிர்பார்த்த படி டீசர் வெளியாகவில்லை என்பதால் அஜீத் ரசிகர்கள் மத்தியில் டீசர் வெளியாகும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று விவேகம் படத்தின் டீசர் மே 18-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென இன்று சிவா தனது ட்விட்டரில் 18-ம் தேதிக்கு பதில் வரும் 11-ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.