கறுப்புக் குதிரை!

நீண்ட தூரப் பயணங்களுக்காக, இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம்தான் ‘டார்க் ஹார்ஸ்.’ இந்த கறுப்புக் குதிரை எப்படி இருக்கிறது?




சாலைகளில் பறக்கும் படகாக, ‘இந்தியன் சீஃப்டைன் டார்க் ஹார்ஸ்’ தோற்றமளிக்கிறது. இந்த டூரிங் பைக்கின் நீளம் 8.5 அடி; 377 கிலோ எடை.

எளிய, நேர்த்தியான வடிவம்கொண்ட இந்த டார்க் ஹார்ஸ் பைக்கில் வசதியான இருக்கைகள், காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கும் விண்ட் ஷீல்டு, எலெக்ட்ரானிக் முறையில் சாவியில்லாமல் இயங்கும் திறன்கொண்ட பட்டன் ஸ்டார்ட்டர் ஆகிய வசதிகள் உள்ளன. நெரிசல் மிகுந்த சாலைகளுக்காக இல்லாமல், நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் சொகுசாகப் பயணிப்பதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது, இந்தக் கறுப்பு குதிரை.

ஒரு பக்கா டூரிங் பைக்குக்குத் தேவையான அனைத்து அம்சங்களும்கொண்ட ரோடுமாஸ்டரில் இருக்கக்கூடிய சில முக்கிய அம்சங்கள் இங்கே மிஸ் ஆனாலும், ரைடர்களைக் கவருவதற்காகவே 100 வாட் திறன்கொண்ட ஸ்பீக்கர்கள், ப்ளூ-டூத் வசதி, ஸ்மார்ட்போன் இணைத்துக்கொள்ளக்கூடிய மியூசிக் சிஸ்டம், எஃப்.எம் ரேடியோ என வசதிகளில் அள்ளுகிறது.



ஏர் கூல்டு, V-ட்வின், 1,811 சிசி ஏர் கூல்டு இன்ஜின், இந்த பைக்கின் ‘ஹார்ட் பீட்டாக’ கருதப்படுகிறது. இது தொழில்நுட்பத்தில் புதிய இன்ஜினாக இல்லையென்றாலும், அதிர்வுகளின்றி இயங்குகிறது. 13.89 kgm டார்க் சீராகவே வெளிப்படுவதால், மூன்றாவது கியரில்கூட ஸ்பீடு பிரேக்கரில் ஏற முடிகிறது. இரட்டை எக்ஸாஸ்ட் வெளியிடும் சத்தம், ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.

சேஸி அமைப்பும், ஸ்டீயரிங் - சஸ்பென்ஷன் செட்அப்பும், டார்க் ஹார்ஸ் பைக்கின் அசத்தலான கையாளுமையில் பெரும்பங்கு உண்டு. அற்புதமான ஓட்டுதல் அனுபவத்துக்காக முன்பக்கம் 46 மிமீ ஃபோர்க்கும், பின்பக்கம் ஏர் அட்ஜஸ்டபிள் மோனோஷாக்கும் உள்ளன. ஏபிஎஸ் உடனான 300மிமீ முன்பக்க டிஸ்க் - 300மிமீ பின்பக்க டிஸ்க்கும், 377 கிலோ எடைகொண்ட இந்த கறுப்புக் குதிரையை எளிதாக நிறுத்த உதவுகின்றன. இதன் விலை (டெல்லி எக்ஸ் ஷோரூம் - `32.5 லட்சம்) அதிகமாக இருந்தாலும், இந்தியன் டார்க் ஹார்ஸ் பைக்கின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுக்காகவும், அந்த ராயல் தோற்றத்துக்காகவுமே கிளம்பலாம் ஒரு லாங்-ரைடு.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url