சச்சின் டெண்டுல்கர் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு பாடல்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நடிப்பில் வெளியாக உள்ள சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. 16-வது வயதில் இந்திய அணியில் கால்பதித்து கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டு மொத்த கவனத்தை தன் பக்கம் இழுத்தவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவரின் விளையாட்டு வாழ்க்கையை மையமாக வைத்து சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது.
மும்பயைில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சச்சின் தனது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை திரும்பி பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகும் இத்திரைப்படத்தை எம்.எஸ்.தோனி, சேவாக், ஆகிய முன்னணி கிரிக்கெட் வீரர்களும் நடித்துள்ளனர்.
சச்சின் வாழ்க்கை வரலாறு படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பிரத்யேகமாக இசையமைத்துபாடிய பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் டெண்டுல்கர் மைதானத்தில் இருக்கும் போது ரசிகர்களிடையே இருக்கும் உணர்வை வெளிப்படுத்தும் என்றார். மே 26-ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.