தோல்வியடைந்த விரக்தியில் கை குலுக்க மறுத்து அநாகரீகமாக நடந்த வீரர்
தோல்வியடைந்த விரக்தியில் கை குலுக்க மறுத்து அநாகரீகமாக நடந்த பிரான்ஸ் நாட்டு வீரர்
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் சுலோவாக்கியாவை சேர்ந்த மார்ட்டின் க்லிஷனும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லவுரன்ட் லொக்கோலியும் மோதினர்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் க்லிஷன் 5-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
முதல் இரண்டு சுற்றுகளை 7- 6 மற்றும் 6- 4 என கைப்பற்றிய க்லிஷன், அடுத்த இரண்டு சுற்றுகளை 4- 6 மற்றும் 0- 6 என தோல்வியடைந்தார்.
கடைசியாக இறுதிச்சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6- 4 என லவுரன்ட் லொக்கோலியை தோற்கடித்தார்.
இந்த போட்டி முடிவடைந்தவுடன் லவுரன்ட் லொக்கோலியிடம் கைகுலுக்க க்லிஷன் சென்ற போது, கை குலுக்க மறுத்ததுடன் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்.