தேசியகீதத்தை மறந்த டொனால்டு டிரம்ப் சமூக ஊடகங்களில் கேலி
போர் வீரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் தேசியகீதத்தை மறந்த டொனால்டு டிரம்ப் சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளானார்.
அமெரிக்காவில் நடந்த போர் வீரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியின்போது ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தேசிய கீதத்தை உரக்கப் பாடினார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் கருத்து மோதலை உருவாக்கியுள்ளது.
ஆர்லிங்டன் தேசிய நினைவிடத்தில் நடைப்பெற்ற போர் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது டிரம்ப் தேசிய கீதத்தை உரக்கப் பாடினார். இந்தக்காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அது மட்டுமின்றி டிரம்பை சமூகவலைதளங்களில் பலர் கேலி செய்யத் தொடங்கிவிட்டனர்.
அதற்கு காரணம் தேசியகீதத்தை பாடுவதை அவர் பாதியிலேயே நிறுத்தியதுதான். இதனால் தேசியகீதத்தை டிரம்ப் மறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் கேலி செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.
’தேசிய கீதத்தைக் மனப்பாடம் செய்யக்கூட உங்களுக்கு நேரம் இல்லையா..?’என பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.