இலங்கை பயணம் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் பதிவு
இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடி தனது பயணம் குறித்து டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
புத்த மதத்தினர் புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் ‘வெசாக்’ (புத்த பூர்ணிமா) தினம் என்ற பெயரில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை கொழும்பு நகரில் 3 நாட்கள் நடக்கிறது.
இதில் உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். புத்த பூர்ணிமா திருவிழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக அவர் இன்று (வியாழக்கிழமை) கொழும்பு நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார். இந்த விழாவில் இலங்கை தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இதன் போது வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன்.
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
தனது இலங்கை பயணம் குறித்து டுவிட்டரில் தமிழில் பதிவு செய்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். இதன் போது வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.