கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் பிரதமர் மோடி : மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு





சென்னை: பள்ளிக்கரணை அருகே ஜல்லடையான்பேட்டையில் குளத்தை தூர்வாரும் பணியை மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், குடிநீர் பிரச்னையை தீர்க்க திமுக சார்பில் குளங்கள் தூர்வாரப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரதமருடனான, முதலமைச்சரின் சந்திப்பு அரசியல் ரீதியானது என்றும்,  ஆளுங்கட்சியினர், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுகவினரின் பணிகளை விமர்சித்து வருவதாகவும் திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக -வை உடைத்தும், உடைந்த அதிமுகவை இணைக்கும் முயற்சியிலும், பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக விற்கு புகழ் வந்துவிடும் என்ற நோக்கில் பிற கட்சிகள்  விமர்சனம் செய்வதாக கூறிய முக ஸ்டாலின் , சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறக்க பிரதமர் தேதி கொடுத்து, விழா உறுதியான பிறகு தமது கருத்துகளை  தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளவர்களை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்குவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url