மனித இனம் முதலில் தோன்றிய இடம் ஐரோப்பா
பெர்லின்: மனித இனம் முதலில் தோன்றியது ஆப்ரிக்காவில் அல்ல, ஐரோப்பாவில் தான் என்று ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதனின் மூதாதையர்களான ஏப்ஸ் வகை குரங்குகள் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி வருகின்றனர். இந்த நிலையில் மனித இனம் முதலில் தோன்றியது ஐரோப்பாவில்தான் என ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த டுபிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானி மாடேலைன் போமே தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்கேரியன் அறிவியல் அகாடமியை சேர்ந்த நிகோலாய் ஸ்பேஷவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இவர்கள் ஐரோப்பா கண்டத்தில் உள்ள கிரீஸ் நாட்டில் கிடைத்த மனிதனின் மூதாதையர்களான ஹோமினிட்களின் கீழ்தாடை, பல்கேரியாவில் கிடைத்த அந்த இனத்தின் கடைவாய்ப்பல் படிமங்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ததில் இந்த முடிவு கிடைத்துள்ளது. இதன்படி மனித இனம் தோன்றியது ஐரோப்பா கண்டத்தில் தான் என்று அவர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த மனித மூதாதையர்களை விட 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஆராய்ச்சி தொடர்பாக அந்த குழுவின் தலைவர் போமே கூறுகையில், `‘இந்த படிமங்கள் 70 லட்சம் ஆண்டுக்கு முந்தையது. சிம்பன்சியும் மனிதனும் என 2 ஆக பிரிந்தது கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் தான். ஆப்ரிக்காவில் அல்ல’’ என்றார்.