காமெடி நடிகருடன் ஜோடி போடும் ஹீரோயின்
காமெடியில் ஹீரோவுக்கு நண்பராக வந்துகொண்டிருந்த வடிவேலு, சந்தானம் ஹீரோவாகிவிட்டனர். அந்த வரிசையில் தற்போது கருணாகரன் இணைந்திருக்கிறார். பிரபல ஹீரோயின்கள் ஜோடி போட மறுப்பதால் இயக்குனர்கள் புதுமுகங்களை ஒப்பந்தம் செய்கின்றனர். அந்த வகையில் சந்தானம் ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் அறிமுகமானார் அஸ்னா சவேரி. தற்போது ‘கடிகார மனிதர்கள்’ படத்தில் கருணாகரன் ஜோடியாக அறிமுகமாகிறார் ஷெரின்.
உழைத்து சம்பாதிக்கும் ஊதியத்தில் பெரும் பகுதியை வாடகைக்கு பல குடும்பம் இழக்கிறது. அவர்களின் வாழ்க்கையை சொல்லும் கதையாக இது உருவாகிறது. பிரவீஷ், கே.பிரதீப் ஜோஸ் இப்படத்தை தயாரிப்பதுடன் இவர்களில் பிரதீப் முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். சசிகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வைகறை பாலன் இயக்குகிறார். சாம்.சி.எஸ். இசை. உமா சங்கர் ஒளிப்பதிவு. சென்னை, புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக புதுச்சேரியில் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிபோன்று 100 வீடுகள் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.