மகள்கள் பெயரில் உயில் எழுதிய கமல்





நடிப்பில் கவனம் செலுத்திய அளவுக்கு சொத்து சேர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்று கமல் பற்றி திரையுலகினர் கூறுவதுண்டு. சமீபத்தில் ரஜினியே ஒரு விழாவில் இந்த கருத்ைத வெளியிட்டிருந்தார். விஸ்வரூபம் பட பிரச்னையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு அப்படத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து போராடினார் கமல். கோர்ட்டுக்கு சென்று தீர்வு கண்டபிறகே படத்தை ரிலீஸ் செய்தார். இந்த பிரச்னையால் தனக்கு ரூ.60 கோடி இழப்பு ஏற்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கமல் குறிப்பிட்டிருந்தார்.

சொந்த படங்கள் தயாரித்து வரும் கமல் தற்போது சபாஷ் நாயுடு படம் தயாரிக்கிறார். இதற்கிடையில் விஸ்வரூபம் 2ம் பாகம் வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறார். சபாஷ் நாயுடு படப்பிடிப்பின்போது கமலுக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். ஆனால் மீண்டும் அதன் படப்பிடிப்பில் பங்கேற்காமல் உள்ளார். இதற்கிடையில் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் பெயரில் தனது சொத்துக்களை பிரித்து கமல் உயில் எழுதி வைத்திருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url