விஷாலுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
விஷால், வரலட்சுமி நடித்துள்ள ‘மத கஜ ராஜா’ கடந்த 2 வருடத்துக்கு முன்பே முடிவடைந்தும் சில பிரச்னைகளால் ரிலீஸ் ஆகாமல் முடங்கி உள்ளது. இந்நிலையில் விஷாலும், வரலட்சுமியும் மீண்டும் ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இயக்குனர் லிங்குசாமி இயக்குகிறார். வில்லித்தனமான கதாபாத்திரத்தை வரலட்சுமி ஏற்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் கதாநாயகியாக ஏற்கெனவே கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் தற்போது ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஷால், வரலட்சுமி இருவரும் காதலிப்பதாக கடந்த வருடம்வரை கிசுகிசு வெளிவந்தது. பின்னர் இருவரும் பிரேக் அப் செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்த பிரச்னைகளுக்கு பிறகு விஷால், வரலட்சுமி இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.