ஐரோப்பாவில் ஷுட்டிங்கை முடித்த விஜய் 61 படக்குழு
தெறி படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது விஜயின் 61-வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வந்தது. ஐரோப்பா ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட படக்குழுவினர் விரைவில் சென்னை திரும்ப உள்ளனர். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் சென்னையில் துவங்க உள்ளது.
இது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படமாகும். விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.