காலா என்னுடைய கதை : கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக தலைப்பு, கதை தொடர்பாக அதிக புகார்கள் வருகின்றன. இந்நிலையில் காலா படத்தின் கதை, மற்றும் தலைப்பு என்னுடையது என்று ராஜசேகர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ராஜசேகர் என்பவர் இயக்குநர் கஸ்தூரிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்துள்ளார். புகாரில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படத்தின் கதை என்னுடையது என்றும், காலா என்னும் தலைப்பை நான் 1994-ம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
காலா படத்தின் ஷூட்டிங் மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி 2-வது முறையாக நடிக்கிறார். இந்த படத்தை தனுஷின் வுண்டர் பார்ம்ஸ் நிறுவனமட் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினியுடன் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த காட்சிகளை ரஞ்சித் படமாக்கினார். 40 நாட்கள் தொடர்ந்து மும்பையில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர். கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.