நயன்தாராவுடன் நடிக்க கவுதம் மேனன் மறுப்பு
அதர்வா, நயன்தாரா, ராசி கன்னா நடித்துள்ள படம், இமைக்கா நொடிகள். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுக்கு வில்லனாக, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பதாக இருந்தது. இப்போது பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து அஜய் ஞானமுத்து கூறியதாவது: பெங்களூரையே தொடர் கொலையால் அதிரவைக்கும் ருத்ரா என்ற கொலைகாரனை வேட்டையாடுகிறார், சி.பி.ஐ அதிகாரி நயன்தாரா.
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவரான அதர்வா ஜாலியாகப் படித்துக்கொண்டும், காதலித்துக்கொண்டும் இருக்கிறார். இரண்டையும் இணைந்து கலக்கும் கிரைம் கதை இது. நயன்தாராவால் வேட்டையாடப்படும் ருத்ரா கேரக்டரில் கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவருக்கு 2 பட வேலைகள் இருந்ததால் நடிக்க முடியவில்லை.
எனவே, இந்தி அகிரா படத்தில் நடித்த டைரக்டர் அனுராக் காஷ்யப் பொருத்தமாக இருப்பார் என்று டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசிடம் சொன்னோம். அவர் சிபாரிசு செய்த பிறகு அனுராக் காஷ்யப்பிடம் கதை சொன்னோம். பிடித்திருந்ததால் நடித்தார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஆகஸ்டில் படம் வெளியாகிறது