ஆர்.கே.நகரில் குதித்த வெங்கட் பிரபு




சென்னை-600028 - இரண்டாவது இன்னிங்ஸ் படத்தை வெங்கட் பிரபு அடுத்து தயாரிக்கும் படத்திற்கு பெயர் வைக்காமல் இருந்தார். இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரை வெங்கட் பிரபு தான் தயாரிக்கும் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெங்கட் பிரபு வெளியிட்டார். இது ஒரு அரசியல் பின்புலம் கொண்ட கதையாக இருக்கலாம் என தெரிகிறது. வடகறி படத்தை இயக்கிய சரவணராஜன் இயக்குகிறார்.

ஹீரோவாக வைபவ், ஹீரோயினாக சானா அல்தாப் நடிக்கிறார். வில்லனாக சம்பத் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ளார். கே.எல்.பிரவீன், விதேஷ், வாசுகி பாஸ்கர் முதலானோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்ற உள்ளனர். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url