இறுதிசுற்று பட இயக்குனரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?
இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கதை நிஜ சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. கொங்காரா த்ரில்லர் கதை ஒன்றை தான் இயக்க உள்ளார். சிவகார்த்திகேயனை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த கொங்காரா இந்த கதையை கூறியுள்ளார்.
இதனால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கவில்லை. சிவகார்த்திகேயன் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.