‘கலையைவிட உயர்ந்தவர் யாருமில்லை’ : தத்துவம் பேசும் மணிரத்னம் ஹீரோயின்
மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அதிதி ராவ் ஹைத்ரி. அவர் கூறியது: ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவரும் திறமையை நிரூபிக்க வேண்டியது அவசியம். காலப்போக்கில் திறமை குறைபாடு ஏற்பட்டால் அது அந்த நபருக்கு பிரயோஜனமாக இருக்காது.
ஒவ்வொருவரும் அவரவர் லட்சியத்திலும், பயணங்களிலும் தெளிவாக இருக்க வேண்டியது மட்டுமல்ல அதற்காக தொடர்ந்து உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருபோதும் கலையைவிட சிறந்தவர் யாரும் கிடையாது. ஒவ்வொருவரும் தனது தனித் தன்மையை எண்ணி பெருமைப்பட வேண்டும். இது எனக்கு வாழ்க்கை கற்றுத் தந்த பாடம். நாம் வித்தியாசமானவராக இருக்கலாம். ஆனால் நமது பெரிய பலமே தனித்துவமாக இருப்பதுதான்.