அமெரிக்காவில் பாடகி சின்மயிடம் கொள்ளை
‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. பிரபல ஹீரோயின்களுக்கு டப்பிங் குரலும் பேசுகிறார். சமீபத்தில் இவரைபற்றி தவறான தகவல்கள் சுசி லீக் இணைய தள பதிவில் வெளியானது. அதற்கு சின்மயி கண்டனம் தெரிவித்திருந்தார். சமீபத்தில் சின்மயி அமெரிக்கா சென்றார். தனது இசை ஆல்ப பணிக்காக அங்கு பல்வேறு இடங்களில் ஷூட் நடத்தினார். வர்த்தக நிறுவனம் ஒன்றின் எதிரே காரை நிறுத்திவிட்டு சென்றிருந்த சின்மயி மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த விலை உயர்ந்த பொருட்கள், கைப்பை ஆகியவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இது பற்றி சின்மயி கூறும்போது,’கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியில் பேச்சுகூட வராமல் நின்றுக்கொண்டிருந்தேன். காருக்குள் நான் வைத்திருந்த எல்லா பொருட்களுமே கொள்ளை போய்விட்டது. என்னை மட்டும் கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறான்?’ என குறிப்பிட்டார்.