Type Here to Get Search Results !

இந்திய அணி மே.இ. தீவுகள் பயணம்




இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாத இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி 20 ஆட்டம் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

வரும் ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி, அதை தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்று குறுகிய வடிவிலான தொடரில் விளையாட உள்ளது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 23-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது முதல் ஒருநாள் போட்டி ஜூன் 23-ம் தேதியும், 2-வது போட்டி 25-ம் தேதியும் டிரினிடாட்டில் நடைபெறுகிறது. 3-வது போட்டி 30-ம் தேதியும், 4-வது போட்டி ஜூலை 4-ம் தேதியும் ஆன்டிகுவாவில் நடத்தப்படுகிறது. கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 6-ம் தேதி ஜமைக்காவில் நடக்கிறது.

இதை தொடர்ந்து ஜூலை 9-ம் தேதி டி 20 ஆட்டமும் ஜமைக்காவில் நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad