Type Here to Get Search Results !

ஐஎஸ் ரகசியத்தை ரஷ்யாவுக்கு அளித்த ட்ரம்ப்?- அமெரிக்க அரசியலில் அதிர்வலைகள்






ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான ரகசிய தகவல்களை ரஷ்யாவுக்கு அளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாரவ் அண்மை யில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். அப்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான ரகசிய தகவல்களை வழங்கியதாக ெசய்திகள் வெளியாகின.

இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தி வருகிறது. தனது செயலை நியாயப்படுத்தும் வகை யில் ட்விட்டரில் ட்ரம்ப் கருத்து களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.

எப்பிஐ இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமே என்பவரை சில நாட்களுக்கு முன்பு அதிபர் ட்ரம்ப் பதவி நீக்கம் செய்தார். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ட்ரம்பின் வெற்றிக்கு ரஷ்யா மறைமுகமாக உதவியதாக ஜனநாயக கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

தேர்தல் பிரச்சார விவகாரம் தொடர்பாக எப்பிஐ விசாரணை நடத்தி வந்தது. இதன் காரண மாகவே ஜேம்ஸ் கோமே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் கள் வெளியாகின.

இதை உறுதி செய்யும் வகையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் மற்றொரு சர்ச்சை செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும், மைக் பிளைன் என்பவரை நாட்டின் தேசிய பாது காப்பு ஆலோசகராக நியமித்தார்.

இவர் ரஷ்யாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படு கிறது. பல்வேறு காரணங்களால் அவர் பதவி விலகினார். மைக் பிளைனின் ரஷ்ய தொடர்புகள் குறித்து எப்பிஐ விசாரித்து வந்தது.

அந்த விசாரணையை கைவிடு மாறு எப்பிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமேவை அதிபர் ட்ரம்ப் மிரட்டி னார் என்றும் அதற்கு கோமே அடிபணியவில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் ஜெனரல் மெக் மாஸ்டர் கூறும்போது, ‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங் களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ரகசிய தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப் புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே அமெரிக்க ஊடகங்கள் சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad