3 நாளில் ரூ.27.85 கோடி வசூலித்த சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்
சச்சின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ். இதில் சச்சினே நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை சச்சினின் நண்பரான ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான முதல் நாளில் ரூ.8.40 கோடியும், 2-வது நாளில் ரூ.9.20 கோடியும், 3-ம் நாள் ரூ.10.25 கோடியும் வசூலித்துள்ளது. இன்னும் படம் ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூல் செய்யும் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.