ஆளும் எடப்பாடி அணியினர் தவறான பாதையில் செல்வதால் ஆட்சி கவிழும்: பன்னீர் செல்வம் கருத்து
சேலம்: ஆளும் எடப்பாடி அணியினர் தவறான பாதையில் செல்வதால் ஆட்சி எங்களால் தான் கலைக்கப்படும் நிலை வராது என்று கூறியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களாலேயே ஆட்சி கலைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாக பிரிந்த அதிமுக இணைய விதிக்கப்பட்ட 2 கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஓயபோதில்லை என்று தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட 122 எம்.எல்.ஏ.க்களும் மனசாட்சி படி செயல்பட வில்லை என்று பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். அவர்களை செயல்பட விடாமல் தடுத்து வருவதால் இந்த ஆட்சியை எங்கள் அணியால் கலைக்கப்படும் நிலை வராது என்றும் அது அவர்களாலே தான் முடியும் என்றும் தெரிவித்துள்ளார். தினம் ஒரு வேண்டாத கருத்துகளை சொல்லும் அமைச்சர்களே கட்டுக்குள் வைக்க முடியாத நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாக பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இந்த ஆட்சியின் கையாளாகாத தனத்தால் தான் கியா மோட்டார் தொழிற்சாலை ஆந்திராவுக்கு சென்றுவிட்டது என்று அவர் குற்றம்சாட்டினார்.