தமிழில் நடிப்பது பெருமை : விவேக் ஓபராய் நெகிழ்ச்சி




தமிழ் படத்தில் நடிப்பது தாய்மொழியில் நடிப்பது போல் உள்ளதாக விவேக் ஓபராய் கூறியுள்ளார். சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசனுடன் இணைந்து விவேக் ஓபராயும் நடிக்கும் படம் விவேகம். இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீசாகிறது. இது குறித்து விவேக் ஓபராய் கூறியது: தமிழகம் எனக்கு தாய் வீடு போல. தமிழ் படத்தில் நடிப்பதை பெருமையாகவும் தாய் மொழியில் நடிப்பதை போலவும் உணர்கிறேன். அஜீத்தை ஷூட்டிங்கில் அண்ணா என்றுதான் அழைப்பேன்.

அவர் ரொம்பவே கூல் டைப். மிகவும் நட்பாக பழகுவார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. இந்த படத்தில் வித்தியாசமான வேடம் ஏற்கிறேன். அது வில்லன் வேடமா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். படத்தின் டீசர் வெளியாகி சாதனை படைத்துள்ளது. இதற்காக அஜீத் ரசிகர்களுக்கும் எனது குடும்பமான தமிழர்களுக்கும் நன்றி சொல்கிறேன்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url